சென்னை அரும்பாக்கத்தில் நடந்த கொள்ளை வழக்கில் போலீசாரின் கவனத்தைதிசை திருப்பிய கொள்ளையர்கள் பற்றிய திடுக்கிடும் தகவல்
சென்னை அரும்பாக்கத்தில் நகைக் கொள்ளை வழக்கில் போலீசாரின் கவனத்தை திசைதிருப்ப பல்வேறு இடங்களில் செல்போனை ஆன் செய்து ஆப் செய்துள்ளனர் கொள்ளையர்கள். செல்போன் சிக்னலை போலீசார் பின்தொடர்ந்தால் அது பல வழிகளில் கடந்து செல்வது போன்றும் ஆன்லைன் மூலம் வடிவமைத்துள்ளனர். தற்போது கைதான கொள்ளையர்களிடம் தொழில்நுட்பரீதியாக உதவியவர்கள் குறித்து விசாரணை நடக்கிறது.