• Thu. Dec 11th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

கழிவுநீரால் தொற்று நோய் பரவும் அபாயம்.. நடவடிக்கை எடுக்கப்படுமா?

By

Sep 8, 2021 ,
Kanniyakumari

குமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வாத்தியார் விளை, ஜஸ்டஸ் தெரு, அருகுவிளை போன்ற பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு வருடங்களாக கழிவு நீரோடைகள் சரி செய்யப்படாததால் அந்த பகுதியில் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இதனால் சுகாதாரக்கேடு காரணமாக ஏராளமானோருக்கு நோய் தொற்று பரவி வருவதாவும், இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு பல முறை புகார் தெரிவித்தும் இதுவரை எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுகின்றனர்.

இதனையடுத்து, மாநகராட்சிக்கு உட்பட்ட 52 வார்டுகளிலும் சுகாதார கேடுகளை தீர்க்க முன்வராத நிலையில், மாநகராட்சியை விரிவுபடுத்துவது தேவையற்றது என கூறி தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.