• Tue. Apr 30th, 2024

சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

Byவிஷா

Apr 16, 2024

தஞ்சாவூர், மதுரை, தூத்துக்குடி, கோவை, சென்னை அருகேயுள்ள கும்மிடிப்பூண்டி, சின்னசேலம், சங்ககிரி ஆகிய 7 பிளாண்ட்களிலும் லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்கை தொடங்கி உள்ளதால் தமிழ்நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை பாரத் பிளாண்ட்டிற்கு உட்பட்ட பகுதிகளில் சிலிண்டர் லோடு இறக்கு கூலியாக விநியோகஸ்தர்கள் ரூ.600 வாங்கி வந்த நிலையில், தற்போது ரூ.950 வசூலிக்கின்றனர். ஆனால், விநியோகஸ்தர்களின் டெண்டரில், இறக்கு கூலி மிக குறைவாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனை வெளியிட அதிகாரிகள் மறுக்கின்றனர்.அதேபோல், சிலிண்டரின் மூடிகள் மிஸ்சிங் என மாதந்தோறும் ஒவ்வொரு லாரி உரிமையாளர்களிடமும் ரூ.3 ஆயிரம் வரை பிடித்தம் செய்கின்றனர்.
இவ்வாறு தஞ்சாவூர், மதுரை, தூத்துக்குடி, கோவை, சென்னை அருகேயுள்ள கும்மிடிப்பூண்டி, சின்னசேலம், சங்ககிரி ஆகிய 7 பிளாண்ட்களிலும் லாரி ஸ்டிரைக்கை தொடங்கி உள்ளோம். இதனால் இந்த பிளாண்ட்களில் இருந்து சிலிண்டர் சப்ளை மேற்கொள்வது, 60 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் இன்னும் ஓரிரு நாளில் பாரத் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *