• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான பழிவாங்கும் அதிரடி ஆக்சன் திரைப்படமான “சாணிக்காயிதம்”

திரைப்படத்தின் உலகளாவிய திரை வெளியீட்டை ப்ரைம் வீடியோ தளம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஸ்க்ரீன் சீன் மீடியா நிறுவனத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், மற்றும் செல்வராகவன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். பொன்னி (கீர்த்தி சுரேஷ் தோன்றும் பாத்திரம்) மற்றும் அவளது குடும்பத்தினருக்கு அநீதி இழைக்கப்படுகிறது, தலைமுறை தலைமுறையாக அக்குடும்பத்திற்கு நீடித்து வந்த சாபம் உண்மையாக மாறத்தொடங்கும்போது, விளம்பர முன்னோட்ட காட்சிகளில் காணப்படுவது போல அவர் ஒரு கசப்பான கடந்த காலத்தை தன்னோடு பகிர்ந்து கொண்ட சங்கையாவோடு (செல்வராகவன் தோன்றும் பாத்திரம்) இணைந்து எதிரிகளைப் பழிக்குப் பழி வாங்க ஆரம்பிக்கிறார் இதனை சுற்றியே இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தமிழ் திரைப்படம் பிரத்யேகமாக மே 6 ஆம் தேதி பிரைம் வீடியோவில் ஒளிபரப்பாகிறது, மற்றும் இந்தத் திரைப்படம் தெலுங்கில் சின்னி- Chinni-என்ற பெயரிலும் மலையாளத்தில் சாணிக்காயிதம் என்றபெயரிலும் ஒளிபரப்பாகிறது. படம் குறித்து இயக்குனர் அருண் மாதேஸ்வரன் கூறுகையில்…
“சாணிக்காயிதம் மனதை உலுக்கும் ஒரு அழுத்தமான படைப்பு; மனதைக்கொள்ளை கொள்ளும் வகையிலான கதை சொல்லும் பாங்கு மற்றும் அற்புதமான நடிப்பு ஆகியவற்றை கொண்டுள்ள இந்தத் திரைப்படம் அதிரடி காட்சிகளை விரும்பும் ரசிகர்களை இறுதிவரை கட்டிப்போடும்” .
“வழக்கமான கதைகளை வழக்கத்திற்கு மாறாக ரத்தமும் சதையுமாக மயிர்க்கூச்செறியும் வகையில் மாறுபட்ட வடிவங்களில் சொல்லியிருக்கிறேன்
பழிக்குப் பழி வாங்கத்துடிக்கும் கருப்பொருளோடு பின்னிப்பிணைந்த ஒரு பரபரப்பான அதிரடியான கதைக்களம் இப்படத்தில் அமைந்துள்ளது. பழிவாங்கும் குறிக்கோளோடு பயணப்படும் ஒரு பெண்ணின் கதை இது.”
ஒவ்வொரு வகையான கதைக்கும் ஒவ்வொரு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது, அமேசான் ப்ரைம் வீடியோவின் பெரும் விநியோகத்தின் துணையோடு இணைந்து உலகெங்கிலும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களுக்கு சாணிக்காயிதத்தை கொண்டு செல்வதில் நான் பரவசமடைந்திருக்கிறேன் என்றார்.