• Sat. Sep 5th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

பள்ளியில் மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு புதிய நிர்வாகிகள் தேர்வு:

ByN.Ravi

Aug 25, 2024

மதுரை தல்லாகுளம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் தேர்ந்தெடுக்கும்கூட்டம், மாநகராட்சி 31 வது வார்டு மாமன்ற உறுப்பினர்
முருகன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில்,பள்ளி தலைமை ஆசிரியர் ரூபி முன்னிலை வகித்தார். பள்ளி மேலாண்மை குழுவில்,தலைவியாக ராணி, துணைத்தலைவராக ராமகிருஷ்ணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சிறப்பு விருந்தினராக அரிமா சங்கத் தலைவர் முத்துகிருஷ்ணன், ஆனந்த், சிவதாஸ் மற்றும் சாகர் தொலைக்காட்சி நிறுவன ஒருங்கிணைப்பாளர் டுகாதி ஆகியோர் பங்கேற்றனர். தொடர்ந்து, பள்ளி மேலாண்மை குழுவின் நோக்கம், முக்கியத்துவம் மற்றும் அரசின் கல்வி உதவி திட்டங்கள் குறித்து, பெற்றோர்களிடம் தெரிவிக்கப்பட்டது. இதில், உறுப்பினர்களாக 20 நபர்கள் தேர்வு செய்து, சான்றிதழ் வழங்கப்பட்டது.