• Fri. Mar 29th, 2024

திருவாரூர் தெற்கு ரத வீதிக்கு கலைஞர் கருணாநிதி பெயர் வைக்கும் தீர்மானம் நிறுத்தி வைப்பு

திருவாரூர் தெற்கு ரத வீதிக்கு கருணாநிதி பெயர் வைக்கும் நகராட்சி தீர்மானத்தை நிறுத்தி வைக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

மத்திய பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான 66 சென்ட் நிலத்தை பெறுவதற்காக, கடந்த, எட்டு ஆண்டுகளாக நிறைவடையாமல் இருந்த திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா மேம்பால பணிகள் மீண்டும் துவங்கியுள்ளன.இப்பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என். நேரு கூறியதாவது: திருவாரூர் தெற்குரத வீதிக்கு கருணாநிதி பெயர் வைக்கும் நகராட்சி தீர்மானத்தை நிறுத்தி வைக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதுகூட தெரியாமல் பாஜக தலைவர் அண்ணாமலை அரசியல் செய்கிறார். அவர் கூறியபடி, அரசு அதிகாரிகளை தடுத்தால், அவர் மீது வழக்குப் பாயும். திருச்சி விமான நிலையம் நாட்டிலேயே சிறந்த சிறு விமான நிலைய நிலையங்களில் அதிக லாபம் ஈட்டக்கூடியதாக இருக்கிறது. எனவே, தனியார் நிறுவனம் இந்த விமான நிலையத்தை வாங்கி விட்டனர். திருச்சி விமான விரிவாக்கத்திற்காக, எங்களிடம் இருக்கும் இடத்தை கொடுக்க தயாராக இருக்கிறோம். மத்திய பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான இடம் வேண்டுமானால், அதை அந்த தனியாரே கேட்டு வாங்கிக் கொள்வார்கள்.

சென்னையில் வரி உயர்த்தி, 22 ஆண்டுகள் ஆகின்றன. மற்ற ஊர்களில், 13 ஆண்டுகள் ஆகின்றன. 1998 நாங்கள் இயற்றிய சட்டத்தை கிடப்பில் போட்டு விட்டனர். ஆனால், அந்த சட்டத்தை ஆந்திரா எடுத்துச் சென்று அமல்படுத்திவிட்டது. அதன்பிறகு, 2008 ஆண்டு இயற்றிய சட்டத்தை அதிமுக தேர்தலுக்காக கிடப்பில் போட்டுவிட்டனர். ஒட்டுமொத்தமாக, 10 ஆண்டுகளுக்கான வரியை உயர்த்தினால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர் என்பதால் ஆண்டுக்கொரு முறை வரி உயர்வை அமல்படுத்தியுள்ளோம். மக்களுக்கு நன்மை செய்யவே இந்த சட்டத்தை இயற்றியுள்ளோம். ஆண்டுதோறும் வரி உயர்வு, மக்கள் பணத்தை அரசு எடுத்துச் செல்வதற்காக இல்லை. நகர்ப்புற அமைப்புகள் நிதிவளம் பெற்று, தன்னிச்சையாக செயல்பட இந்த சட்டம் உதவும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *