• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

முதியோர் நலத்திற்குக்கென தனி இயக்குனராகம் தமிழக அரசுக்கு கோரிக்கைதீர்மானம்

Byp Kumar

Jun 12, 2023

தமிழ்நாடு சமூக நலத்துறை ஓய்வூதிய நல அமைப்புகூட்டத்தில் முதியோர் நலத்திற்குக்கென தனி இயக்குனராகம் அமைக்க தமிழக அரசுக்கு கோரிக்கைதீர்மானம் நிறைவேற்றப்பட்டது

மதுரையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வருவாய் அலுவலர் அரங்கத்தில் தமிழ்நாடு சமூக நலத்துறை ஓய்வூதியர் நல அமைப்பின் மதுரை மண்டலத்தின் சார்பில் மண்டல கூட்டம் நடைபெற்றது இந்த மண்டல கூட்டத்திற்கு விலங்கையா தலைமையிலும் அமைப்பின் மாநிலதலைவர் குபேந்திரபாபு துணைத்தலைவர் ருக்குமணி பொதுச்செயலாளர் வாசுதேவன் மாவட்ட சமூக நல அலுவலர் பரமேஸ்வரி, துரைசிங்ஆகியோர் முன்னிலையிலும் மண்டல கூட்டம் நடைபெற்றது இந்த மண்டல கூட்டத்திற்கு மதுரை ராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது தீர்மானம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் விலங்கையா கூறியது முதியோர் நலத்திற்ெகான தனி இயக்குனரகம் அமைக்க அரசிற்கு கோரிக்கை தீர்மானமும் ஓய்வூதியர்களுக்கு 1/4/2023 முதல்கூடுதல் ஆகவில்லை படி உயர்த்தப்பட்டமைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானமும் 70 வது முடிந்த ஓய்வூதியர்களுக்கு 10% கூடுதல் ஓய்வூதியம் வழங்க அரசிற்கு கோரிக்கை வைக்க தீர்மானிக்கப்பட்டது எனவும் புதிய காப்பீட்டு திட்டத்திற்கு குறைபாடுகளை கலைந்து முழுமையாக மருத்துவ செலவினங்களை வழங்க கோரிக்கை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது எனக் கூறினார்