சுகாதார துறை அமைச்சத்தின் உத்தரவின் படி விருதுநகர் நகராட்சி சுகாதார துறை , தொழு நோய் குறித்து விருதுநகர மக்களிடம் ஆய்வு செய்து வருகின்றனர். இது குறித்து கள பணியாளர் சந்திரசேகர் கூறுகையில் தொழு நோய் குறித்து அறிகுறிகள் தென்படுகிறதா என்று வீடு தேடி சென்று ஆய்வு செய்து வருகின்றோம்.

அதாவது உடலில் வெள்ளை நிறத்தில் தழும்புகள் தேமல் போன்று உள்ளதா என்பதை அறிந்து அவர்களின் பெயர் ,விலாசம் குறித்துக்கொண்டு எங்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளிப்போம் என்று கூறினார். மேலும் நகராட்சி சுகாதார ஆய்வாளர் முகேஷ் கூறுகையில் விருதுநகர் நகராட்சி சுகாதார துறை சார்பில் நகர் முழுவதும் 24 குழுக்கள் தொழு நோய் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர் இறுதியாக ஆய்வுகள் மருத்துவ பிரிவுக்கு (மருத்துவர்கள்) அனுப்பி வைக்கப்படும் என்றார்.














; ?>)
; ?>)
; ?>)