விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இறவார்பட்டி, அச்சங்குளம் இடையே வைப்பாறு ஆறு செல்கிறது, இந்த வைப்பாற்று நதியின் குறுக்கே 25 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதி மக்களின் போக்குவரத்து பயன்பாட்டிற்காக ஓடு பாலம் அமைக்கப்பட்டது, அமைக்கப்பட்ட பாலம் கட்டி முடித்து மூன்று மாதங்களில் மழை வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டது.

அன்று முதல் இன்று வரை பாலத்தை சரி செய்யப்படவில்லை இதனால் ஓடு பாலம் வழியாகத்தான் அச்சங்குளம் கிராமத்தில் உள்ள பொதுமக்கள் இரவார்பட்டியில் உள்ள ரேஷன் கடைக்கு வந்து தான் பொருட்கள் வாங்க வேண்டிய நிலைமை உள்ளது.
ஆனால் ஆண்டுதோறும் வெம்பக்கோட்டையில் நீர்த்தேக்கம் அணையில் இருந்து திறந்துவிடும் தண்ணீரால் போக்குவரத்து தடைப்படுவதாகவும் ரேஷன் பொருட்கள் எதுவும் வாங்க முடியாமல் தவிப்பதாகவும் கூறுகின்றனர்.
மேலும் அப்பகுதியில் உள்ள சுமார் 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள பொதுமக்கள் இந்தப் பாலம் வழியாக ஏழாயிரம்பண்ணை, கோவில்பட்டி,
குகன்பாறை, கழுகுமலை, உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணித்து வந்த நிலையில் இந்த தரைப்பாலம் தற்போது முற்றிலும் சேதம் அடைந்து காணப்படுகிறது.

எனவே இந்தத் பாலத்தை சரி செய்து தரும்படி இரவார்பட்டி மற்றும் அச்சங்குளம் கிராம மக்கள் தற்போது பாலத்தின் மீதும் தண்ணீரில் இரங்கியும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்…
மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பொதுமக்களிடம் வருவாய் துறையினர், மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.