• Tue. Sep 8th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்த கோரிக்கை..,

ByK Kaliraj

Feb 7, 2026

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் யூனியன் அலுவலகம் இயங்கி வருகிறது. யூனியன் அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்கள் வெளியேற்றிய குப்பைகள் யூனியன் அலுவலகத்தில் வைக்கப்பட்ட குப்பைத்தொட்டிகளில் கொட்டப்பட்டு வருகின்றன.

ஆனால் குப்பைத்தொட்டிகள் நிரம்பி பல நாட்கள் ஆகியும் அப்புறப்படுத்தப்படாமல் உள்ளது. இதனால் குப்பைக் கழிவுகளினால் துர்நாற்றம் ஏற்பட்டு வருகிறது. குப்பைத்தொட்டியின் அருகில் வலதுபுறம் வட்டார கல்வி அலுவலகம், இடது புறம் வெம்பக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலகமும், செயல்பட்டு வருகிறது. குப்பைத் தொட்டியில் இருந்து வெளிவரும் துர்நாற்றம் காரணமாக சுகாதாரக் கேடு ஏற்பட்டு வருகிறது.

நோய் தொற்று ஏற்படுவதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிரம்பிய குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.