கன்னியாகுமரி மாவட்டம் இரையுமன்துறையில் கடல் சீற்றத்தில் இருந்து மக்களை பாதுகாக்கவும், வீடுகளில் கடல் தண்ணீர் புகாமல் இருக்க 250 மீட்டர் தூண்டில் வளைவு அமைக்க கிராம மக்கள் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் இடம் கோரிக்கை வைத்தனர்.

இன்று இரையுமன்துறைக்கு சென்ற விஜய்வசந்த் அந்த பகுதிகளை பார்வையிட்டார். மேலும் அங்குள்ள ஆற்றின் கரையில் சுவர் அமைத்து தேங்காய்பட்டணம் துறைமுகத்திற்கு இணைப்பு சாலை அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் தாரகை கத்பட், வர்த்தக காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஆமோஸ், மாவட்ட துணை தலைவர் மகேஷ்லாசர், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரத்தினகுமார், இளைஞர் காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவர் திபாகர், மேற்கு மாவட்ட ஓ. பி. சி பிரிவு மாவட்ட தலைவர் ஸ்டுவர்ட், வட்டார தலைவர் கிறிஸ்டோபர், மரியதாசன், பங்கு தந்தை ரெஜீஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- வாக்குவாதத்தில் ஈடுபட்டதிமுக மாமன்ற உறுப்பினர்..,
- துரோக வரலாறு எனும் அமமுக போஸ்டர்..,
- போதையில் சென்ற இருவர் கார்கள் மீது மோதி சேதம்.,
- மெத்தாபேட்டமைன் கடத்திய 4 பேர் சிறையில் அடைப்பு !
- இடிந்து விழும் நிலையில் நீர்த்தேக்க தொட்டி..,
- 1.25 கோடி தங்கம் கொள்ளை வழக்கில் 2 பேர் கைது !!!
- போத்தீஸ் கடைகளில் வருமானவரித்துறை சோதனை.
- ஆணவ படுகொலை மையப்படுத்தி “ஒத்த உசுரு”..,
- உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்..,
- கடலுக்கு அடியில் இருக்கும் இன்டெர்நெட் கேபிள்கள் யாருக்குச் சொந்தம்