ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையை நேர்மைமை மிகு துறையாகவும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் நலன் கருதி பல முன்னெடுப்புக்களை மாபெரும் புரட்சி செய்து வரும் ஆணையர் ஐயா அவர்களை பாராட்டுவதில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு பாராட்டுவதில் பெருமை அடைகிறது.

தங்களின் சீரான முன்னெடுப்பால் ஒரு சிறு தவறுகள் நடக்காவண்ணம் ஆசிரியர்களின் பொது விருப்ப மாறுதல் கலந்தாய்வு , விடுதிகளில் மாணவர்கள் காப்பாளர் வருகையை உறுதி செய்து எந்த கையாடல் செய்தும் மாணவர்களின் வயிற்றில் அடிப்பதை தடுத்து நிறுத்த விடுதிகளில் கேமரா மற்றும் வருகையை உறுதி்செய்ய பையோ மேட்ரிக் வருகை பதிவை கட்டாய படுத்தி மாபெரும் புரட்சி செய்துள்ளீர்கள்.

அதேபோன்று காலிய உள்ள விடுதிகளிலும் ஐந்து ஆண்டிற்கும் மேலாக விடுதி காப்பாளர்களை விடுவித்து விருப்பம் உள்ள ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் தமிழ் மற்றும் சமூக அறிவியல் பாட ஆசிரியர்களும் பல ஆண்டுகளாக காப்பாளர்களாக உள்ளனர் அவர்களையும் விடுவித்து மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும் , மாணவர்கள் சேர்க்கை குறைவதற்கு இவர்களும் ஒரு காரணம்.
மேலும் மாணவர்கள் தங்கி பயிலாது விடுதிகளை இரவு பாட சாலையாக மாற்றி அப்பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளும் , அப்பகுதி இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெரும்விதமாக அரசு மற்றும் தனியார் துறைகளில் நடக்கும் வேலைவாய்ப்பிற்கான போட்டித்தேர்வுக்கு தயார் படுத்தும் விதமாக பயிற்சி மையமாக அறிவித்து இரவில் சிற்றுண்டி வழங்க ஏற்பாடு செய்து உதவிகள் செய்தல்

ஆதிதிராவிடர் நலத்துறை பெரும் மாற்றத்தை கொண்டு வந்து மேம்படுத்திவரும் சூழலில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை விடுதி சமையலர் பணியிடங்கள் காலியாக இருக்கும் பட்சத்தில் அந்த பணியிடங்களை நிரப்பு வேண்டும் மேலும் அந்தந்த மாவட்டத்தில் உபரி என கண்டறிய பட்டால் அவர்களை பள்ளிகளில் இரவு காவலர்களாக மாற்றி பள்ளிகளை இரவு நேரங்களில் சமூக விரோதிகளிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள உதவும்.
அதேபோன்று விடுதிகளிலும் பள்ளிகளிலும் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களை காலமுறை ஊதியத்தில் கொண்டுவந்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஐயா அவர்களை கேட்டுக் கொள்கிறேன் ,உடனே செய்ய முடியாத பட்சத்தில் ஊதிய உயர்வு வழங்கி உதவிட பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் ,
மேலும் பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றுகின்ற தூய்மை பணியாளர்களை மேற்படிப்பு பயின்றிருந்தால் அடுத்த நிலை பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது பள்ளிக்கல்வித்துறையை போன்று நம் துறையில் பணியாற்றுகின்ற தூய்மை பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க ஐயா அவர்களை பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பழங்குடியினர் நலத்துறை மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர் தேர்வாரியத்தின் மூலம் தேர்வு எழுதி 18.11.2008 அன்று பணியாற்றுகின்ற கணினி தரநிலை II ஆசிரியர்கள் சுமார் 64 பேர் பணியாற்றுகின்றனர் இவர்கள் அனைவரையும் தர நிலை I என்ற முதுகலை இவர்கள் இவர்கள் அனைவரையும் அரசாணை 26 நாள் 18.11.2019 மற்றும் திருத்திய அரசாணை 130 படி ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை கணினி ஆசிரியர்கள் நிலை 1 என்று அறிவித்து முதுகலை ஆசிரியர்களாக அங்கீகரத்து ஊதியத்தை ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது இதனை கருத்தில் கொண்டு
பள்ளிக்கல்வித்துறையில் கணினி ஆசிரியர்களை நிலை 1 என்று அங்கீகரித்து முதுகலை ஆசியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை பின்பற்றி நமது துறையில் பணியாற்றும் கணினி ஆசிரியர்களையும் நிலை 1 என அறிவித்து முதுகலை ஆசிரியருக்கான ஊதிய நிலையை மாற்றி அமைக்க வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றி உதவிட ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர் தி.ஆனந்த்.இ.ஆ.ப அவர்களை நிறுவனத் தலைவர் திருவூர்.சா.அருணன் மற்றும் நிர்வாகிகள் நேரில் கோரிக்கை வைத்தனர்.