• Mon. Aug 31st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

குடியரசு தினவிழா -மதுரை ஆட்சியர் அனிஷ் சேகர் தேசியக்கொடியை ஏற்றினார்

Byp Kumar

Jan 26, 2023

மதுரை ஆயுதப்படை மைதானத்தில் 74 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் தேசியக்கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்
மதுரை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியதையை ஏற்றுக்கொண்டார் மேலும் வண்ண பலூன்களையும் அவர் பறக்கவிட்டார். தொடர்ந்து சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மேலும், சிறப்பாக பணியாற்றிய 217 காவலர்களுக்கு முதலமைச்சர் பதக்கமும் சிறப்பாக பணியாற்றிய 75 காவல்துறையினருக்கு பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டன .மேலும் அரசின் பல்வேறு துறை சார்பில் 37 பயனாளிகளுக்கு ரூ.28,21,868/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதுபல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்கள் 250 பேருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்