• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஆசிரியர்களுக்கு களஞ்சியம் செயலி கட்டாயம்

Byவிஷா

Dec 31, 2024

தமிழகப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு களஞ்சியம் செயலி கட்டாயம் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளிகளில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விடுமுறை மற்றும் இதர பலன்களைப் பெற களஞ்சியம் செயலி மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகம் அறிவித்துள்ளது. ஏற்கனவே இந்த செயலியை பயன்படுத்த வேண்டும் என்று அறிவிப்பு வெளியான போதிலும் அதனை முழுமையாக பயன்படுத்தவில்லை என்று கருவூல கணக்குத்துறை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தற்போது களஞ்சியம் செயலி கட்டாயம் என்ற உத்தரவு வெளியாகியுள்ளது.
மேலும் ஜனவரி மாதம் முதல் அதாவது நாளை முதல் விடுமுறை உள்ளிட்ட இதர பலன்களுக்கு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் களஞ்சியம் செயலி மூலமாக விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.