• Tue. Sep 17th, 2024

அவதூறு பரப்பும் வகையில் அறிக்கை – அண்ணாமலை மீது வழக்கு

ByA.Tamilselvan

Mar 5, 2023

பாஜக தலைவர் அண்ணாமலை வடமாநிலதொழிலாளர்கள் விவகாரத்தில் அவதூறுபரப்பும் வகையில் அறிக்கை வெளியிட்டதால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோக்கள் வெளியாகி வந்தது. இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு வந்ததும் வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார். இந்நிலையில், வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் அவதூறு பரப்பும் வகையில் அறிக்கை வெளியிட்டதாக தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வதந்தி பரப்புதல், வன்முறையை தூண்டுதல், மத ரீதியான பிரிவினையை ஏற்படுத்துதல், இருபிரிவினரிடையே மோதலை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் அண்ணாமலை மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *