• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

ஒரே ஆண்டில் 6வது முறையாக ரெப்போ வட்டி விகிதம் உயர்வு

ByA.Tamilselvan

Feb 8, 2023

ரெப்போ வட்டி விகிதத்தை 6 வது முறையாக மீண்டும் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார் சக்திகாந்ததாஸ் .
ரெப்போ கடன் வட்டி விகிதம் 6.25 சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். மேலும், வங்கி கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், 2023-24 நிதியாண்டில் பணவீக்கம் சராசரியாக 5.6 சதவீதமாக இருக்கும் என்று சக்திகாந்த தாஸ் கூறினார். கடந்த மாதம்தான் ரெப்போ வட்டி விகிதம் 0.50 காசுகள் உயர்த்தப்பட்டது. தற்போது மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஓராண்டில் ரெப்போ வட்டி விகிதத்தை 6வது முறையாக உயர்த்தியுள்ளது ரிசர்வ் வங்கி