• Fri. Apr 19th, 2024

மதுரை – திருவேடகம் ஏழவார் குழலி அம்மன் கோவிலில் பிரம்ம தீர்த்த தெப்ப திருவிழா

ByKalamegam Viswanathan

Feb 8, 2023

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் ஏழவார் குழலி அம்மன் சமேத ஏடகநாதர் சுவாமி திருக்கோவில் 30 ஆம் ஆண்டு பிரம்ம தீர்த்த தெப்ப திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் ஏழவார் குழலி அம்மன் சமேத ஏடகநாத சுவாமி திருக்கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு ஆண்டுதோறும் தை மாதம் வரும் மகம் நட்சத்திரத்தன்று தெப்பத் திருவிழா விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செவ்வாய்க்கிழமை சுவாமி மற்றும் அம்பாளை திருக்கோவிலில் இருந்து காலை 10:30 மணிக்கு தெப்பத்திற்கு அழைத்து வரும் நிகழ்வு நடைபெற்றது.

தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. மாலை சுமார் ஐந்து மணி அளவில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜையும் சுவாமி மற்றும் அம்பாளுக்கு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து இரவு.9 மணி அளவில் ஏலவார் குழலி ஏடகநாத சுவாமி பிரியாவிடையுடன் பக்தர்கள் புடை சூழ அதிர்வேட்டுகள் முழங்க தெப்பம் மற்றும் ஊர் முழுவதும் வலம் வந்து திருக்கோவிலை அடைந்தனர். அப்போது ஓம் நமச்சிவாயா என்று பக்தர்கள் மனமுருக பாடி சாமி பின் சென்றனர். தொடர்ந்து பக்தர்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி சரவணன், அறங்காவலர் சேவுகன் செட்டியார், விழா குழு தலைவர் நடராஜன், பொருளாளர் மோகன், ராமச்சந்திரன், முத்தழகு, ஏடக. தேவகுமார், மற்றும் திருவேடகம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *