• Mon. May 6th, 2024

வேதாநிலையத்தை நினைவிடமாக மாற்றும் சட்டம் ரத்து

Byவிஷா

Feb 17, 2024

மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதாவின் வேதாநிலையத்தை நினைவிடமாக மாற்றும் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு புரட்சித் தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை சட்டம், 2020, அ.தி.மு.கவின் முன்னாள் தலைவர், முதலமைச்சருமான ஜெயலலிதாவின் “வேத நிலையத்தை” நினைவிடமாக மாற்றுவதற்காக அறக்கட்டளையை நிறுவ சட்டம் இயற்றப்பட்டது. ஆயினும், அவ்வீடு தொடர்பான வழக்கில், அவ்வீட்டின் சாவியை அவரது சட்டபூர்வ வாரிசிடம் ஒப்படைக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் 2021 நவம்பர் 24ஆம் தேதி உத்தரவிட்டது. அதன்படி, 2021 டிசம்பர் 11ஆம் தேதி ஜெயலலிதாவின் மருமகள் தீபாவிடம் அவ்வீட்டின் சாவி ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், மசோதா குறித்து பேசிய மாநில தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், “உயர் நீதிமன்ற உத்தரவுப்படி வேதா இல்லத்தின் சாவி மனுதாரர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றார். இதனால், மேற்கூறிய சட்டம் எந்த நோக்கத்திற்காக இயற்றப்பட்டதோ அந்தச் சட்டம் வழக்கற்றுப் போனது. எனவே, அரசு சட்டத்தை ரத்து செய்ய முடிவுசெய்துள்ளது,” என்று கூறி, மசோதாவைத் தாக்கல் செய்தார். அதன்பின், சட்டமன்றத்தில் குரல் வாக்கெடுப்பு மூலம் அம்மசோதா நிறைவேற்றப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *