விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் 108 வைணவ திருத் தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்குள்ள ஆண்டாள் கோயில் கோபுரம் தமிழக அரசின் சின்னமாக விளங்குகிறது. 108 ஆழ்வார்களில் பெரியாழ்வார், ஆண்டாள் ஆகிய இரண்டு ஆழ்வார்கள் வாழ்ந்த ஊர் ஆன்மீக பூமியாகும் திகழ்ந்து வருகிறது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரம் ஆகும். ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் உள்ள அதிய எண்ணிக்கையில் பயணிகள் வந்து செல்வதால் ரயில் நிலையம் தற்போது புனரமைக்கப்பட்டு வருகிறது. பல கோடி செலவில் ரயில்வே மேம்பாலம், லிப்ட், பிளாட்பாரம், முன்புறம் வாயில், வளாகம் உட்பட அனைத்தும் புனரமைக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
