• Thu. Mar 12th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

அதிமுகவில் இருந்து இபிஎஸ் நீக்கம்

ByA.Tamilselvan

Jul 11, 2022
   அதிமுகவிலிருந்து இபிஎஸ் நீக்கபட்டுள்ளதாக ஓபிஎஸ் அறிப்பு. இப்படி மாறி மாறி வரும் அறிவிப்புகளால் தொண்டர்கள் கலக்கம்

அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கொண்டு வந்த சிறப்பு தீர்மானத்தில் ஓ.பன்னீர் செல்வத்தை பொருளாளர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல, அவருக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகரன் உள்ளிட்டவர்களையும் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்குவதாக அறிவிக்கப்பட்டது.இந்த தகவல் வெளியான சில நிமிடங்களில் அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது, கழக தொண்டர்களால் தேர்வு செய்யப்பட்ட என்னை நீக்க எடப்பாடி பழனிசாமிக்கும், கே.பி.முனுசாமிக்கும் அதிகாரம் இல்லை.
மேலும், கழக விதிகளுக்கு எதிராக செயல்பட்ட எடப்பாடி பழனிசாமி மற்றும் கே.பி.முனுசாமியை கட்சியை விட்டு நீக்குவதாக அறிவித்தார். மேலும், உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாக தெரிவித்தார்.