• Sat. Apr 20th, 2024

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் -அமைச்சர்

ByA.Tamilselvan

Nov 14, 2022

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துவரும் நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்கள்குக நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன்
பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.இதன் காரணமாக பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் அத்தியாவசிய தேவைக்கு கூட வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவிக்கின்றனர். சென்னை எழிலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய வருவாய் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன், கடலூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் 99 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மழையால் பாதிக்கப்பட்ட 52,751 பேருக்கு 99 முகாம்கள் மூலம் உணவு வழங்கப்படுகிறதுஎன் கூறினார்.
மேலும், அமைச்சர் கூறுகையில், வீடுகளுக்கு தண்ணீர் புகுந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.4,800 நிவாரணம் வழங்கப்படும். மழையால் குடிசை முழுவதுமாக இடிந்திருந்தால் ரூ.5,000 வழங்கப்படும். மழையால் குடிசை பகுதி அளவு இடிந்திருந்தால் ரூ.4,100 வழங்கப்படும். மழையால் கான்கிரிட் வீடு இடிந்திருந்தால் ரூ.95,000 வழங்கப்படும். பசு, எருமைகள் உயிரிழந்தால் ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும். கடலூர், மயிலாடுதுறையில் வெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார். எனவே, முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆய்வு செய்த பிறகு நிவாரண தொகை விவரம் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *