• Tue. Dec 10th, 2024

வெளியானது ராஜமெளலியின் ‘ஆர்ஆர்ஆர்’ கிளிம்ப்ஸ்

Byமதி

Nov 1, 2021

ராம் சரண், ஜூனியர் என்டிஆர், அஜய் தேவ்கன், ஆலியா பட், பிரகாஷ் ராஜ் நடிப்பில் ராஜமௌலி இயக்கியுள்ள படம் ‘ஆர்ஆர்ஆர்’. பாலிவுட் நடிகர்கள் நடித்துள்ளதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் வரும் ஜனவரி 7-ஆம் தேதி உலகம் முழுக்க தியேட்டர்களில் வெளியாகிறது என்று படக்குழு சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

இந்த நிலையில், படத்தின் முன்னோட்ட வீடியோ எனப்படம் கிளிம்ப்ஸ் தற்போது வெளியாகி இருக்கிறது. ஆங்கிலேயர்களுக்கு எதிராக ராம் சரணின் பாத்திரம் நெருப்பாகவும், ஜுனியர் என்.டி.ஆர்ரின் கதாபாத்திரம் நீராகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ள சண்டைக்காட்சிகளும் அழகாய் காட்சியளிக்கும் ஆலியா பட்டும் கவனம் ஈர்க்கிறார்கள்.