ஏரோம்பா ஃபிட்னஸ் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஜூம்பா நடனமாடி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தனர். இந்த விழிப்புணர்வு நிகழ்சியை சர்வதேச ஜூம்பா பயிற்சியாளர் ஷாலு தலைமையில். சென்னை நொளம்பூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் உள் விளையாட்டு அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.
உடல் ஆரோக்கியத்திற்காக பல்வேறு உடற்பயிற்சிகளை மக்கள் செய்து வந்தாலும் அதை ஒரு கஷ்டமான வேலையாக நினைத்தே செய்து வருகிறார்கள். ஆனால் ஜூம்பா உடற்பயிற்சியை மட்டும் பலர் இஷ்டப்பட்டு செய்கிறார்கள். இதற்கு காரணம் நடனத்துடன் கூடிய உடற்பயிற்சியாக ஜூம்பா இருப்பது தான். அதே சமயம் ஜூம்பா உடற்பயிற்சியை நடனக்கலைஞர்களால் மட்டுமே செய்ய முடியும் என்ற ஒரு கருத்து மக்களிடையே பரவலாக காணப்படுகிறது.
ஆனால் இந்த கருத்தை மறுத்திருக்கும் சர்வதேச ஜூம்பா உடற்பயிற்சி நிபுணர் ஷாலு, ஜூம்பா ஃபிட்னஸ் நடனக் கலைஞர்களுக்கு மட்டுமே என்பது வெறும் கட்டுக்கதை. இந்த விழிப்புணர்வு ஒவ்வொருவரிடமும் ஜூம்பா உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை அதிகரிக்க செய்வது தான் தனது இலக்கு. குழந்தைகள் உள்ளிட்ட அனைவரும் ஜூம்பா பயிற்சி செய்வதன் மூலம் சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க முடியும் என்றும் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.