• Fri. Apr 19th, 2024

தோல்வியின் எதிரொலியே பெட்ரோல், டீசல் விலையை குறைத்தது: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

Byமதி

Nov 5, 2021

இடைத்தேர்தல்களில் தோல்வியின் எதிரொலியே ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளது என்று முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து உயர்த்தி வந்த ஒன்றிய அரசு, தற்போது வரியை குறைக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்திருந்தது. ஆனால், திடீரென நேற்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை ஒன்றிய அரசு குறைத்தது. இது இடைத்தேர்தலில் பாஜகவுக்கு ஏற்பட்ட பின்னடைவால் மேற்கொள்ளப்பட்டுள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

இந்நிலையில், கலால் வரி குறைப்பு குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் ஒன்றிய அமைச்சருமான ப.சிதம்பரம் ஒன்றிய அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். பல்வேறு மாநிலங்களல் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜகவுக்கு ஏற்பட்ட தோல்வியையும், எரிபொருள் மீதான கலால் வரி குறைப்பையும் இணைத்து கருத்து வெளியிட்டுள்ளார்.


‘இடைத்தேர்தல் முடிவுகள் ஒரு துணை தயாரிப்பை உருவாக்கியுள்ளன. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்திருக்கிறது. குறிப்பாக, அதிக வரிகள் விதிப்பதால் எரிபொருள் விலை அதிகமாக உள்ளது என்ற எங்கள் குற்றச்சாட்டை இது உறுதிப்படுத்துகிறது. மேலும் ஒன்றிய அரசின் பேராசையால்தான் எரிபொருள் மீது அதிகாமன வரி விதிக்கப்படுகிறது’ என ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். ப.சிதம்பரத்தின் இந்த குற்றச்சாட்டிற்கு பதிலளித்துள்ள ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், ‘ஒன்றிய அரசு மக்களின் மகிழ்ச்சியிலும், துக்கத்திலும் உடன் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *