• Fri. Nov 7th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்…

ByS. SRIDHAR

Oct 21, 2025

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் மழை பாதிப்பு குறித்து மட்டுமல்லாது, அவசர தேவைகளுக்கு 1077 என்ற கட்டுப்பாட்டு மைய எண்ணிற்கும் 04322-222207 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதையொட்டி, வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகுவதற்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் புதுக்கோட்டை உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் தொடர்ந்து விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மழை நீர் வேகமாக நீர் நிலைகளை வந்தடைகிறது. தொடர்ந்து மழை பெய்தால் நீர்நிலைகள் நிரம்பி உபரி நீர் வெளியேறக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டால், தாழ்வான பகுதியில் இருக்கும் பொதுமக்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படும்.

அதற்கென மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொது மக்களுக்கு அவசர தேவைகள் மற்றும் மழை பாதிப்பு குறித்து தகவல் தெரிவிப்பதற்காக தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொது மக்கள் 1077 அல்லது 04322 -222207 என்ற நம்பரையும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். 24 மணி நேரமும் செயல்படக்கூடிய அரசு அவசர கட்டுப்பாட்டு அறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வருகின்றன என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.