• Sun. Oct 6th, 2024

3 ஆண்டுகளுக்குமுன் காணமல் போனவர் மீட்பு

ByM.maniraj

Apr 29, 2022

கழுகுமலை பகுதியில் 3 ஆண்டுகளுக்குமுன் காணமல்போனவரை மீட்டு அவரது மனைவியிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கழுகுமலை முனியசாமி கோவில் தெருவை சேர்ந்த முத்துவேல் மகன் சின்னத்தம்பி (43) .இவர் கடந்த 15.08.2018 அன்று காணாமல்போனதாக அவரது மனைவி கலா (39) புகார் அளித்தார்.இந்த புகாரின் பேரில் கழுகுமலை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து சின்னத்தம்பியை தேடி வந்தனர்.
இந்நிலையில் கழுகுமலை காவல் நிலைய உதவி ஆய்வாளர் சதீஷ்குமார், தலைமை காவலர் கண்ணன் மற்றும் கழுகுமலை காவல் நிலைய தனிப்பிரிவு முதல் நிலை காவலர் சுப்புராஜ் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கோவில்பட்டி பழைய பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் மேற்படி காணாமல்போன சின்னத்தம்பி என்பது தெரியவந்தது, உடனே போலீசார் அவரை மீட்டு காவல் நிலையம் கொண்டு வந்து அவரின் மனைவி கலாவிடம் ஒப்படைத்தனர்.
மேற்படி 3 வருடமாக காணாமல்போன சின்னத்தம்பியை கண்டுபிடித்து மீட்டு அவரது மனைவியிடம் ஒப்படைத்த கழுகுமலை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் பாராட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *