• Tue. Mar 24th, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

நவம்பர் ஒன்று முதல் மீண்டும் பள்ளிகள் – கேரளா அரசு அறிவிப்பு

Byகுமார்

Sep 23, 2021

இந்தியாவிலேயே கேரளாவில் தான் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதுமட்டுமின்றி நிபா வைரசும் தற்போது அங்கு பரவிவருகிறது.

இருப்பினும் கொரோனா தொற்று சற்றே குறைந்து வருவதால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பள்ளிகள் திறப்பது குறித்து கேரள முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதனைதொடர்ந்து, ஒன்று முதல் 7ஆம் வகுப்பு வரை, 10மற்றும் 12ஆம் வகுப்புகளை நவம்பர் ஒன்றாம் தேதி முதல் திறக்க உத்தரவிட்டுள்ளார். மற்ற வகுப்புகளை நவம்பர் 15ஆம் தேதி திறக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.