

சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மற்றும் தருமபுரி மருத்துவக்கல்லூரி உள்ளிட்ட மருத்துவக்கல்லூரிகளுக்கு மீண்டும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது
ரத்து செய்யப்படுவதாக முன்பு அனுப்பப்பட்ட நோட்டீஸ் திரும்பப் பெறப்பட்டது.அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள ஓரிரு சிறு குறைகளும் சரி செய்யப்பட்டு அறிக்கை வழங்கப்பட்டது தேசிய மருத்துவ ஆணைய குழுவினர் நேற்று கல்லூரிகளுக்கு நேரடியாக வந்து ஆய்வு செய்தனர்.தற்போது சென்னை ஸ்டான்லி மற்றும் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரிகளுக்கான அங்கீகார ரத்து சான்று திரும்பப் பெறப்பட்டு அடுத்த 5 ஆண்டுகளுக்கு தடையில்லா சான்று வழங்கப்பட்டுள்ளது!” -அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்.

