• Sun. Aug 2nd, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

மிகபிரமாண்டமாக தயாராகும் ஆர்சி-15 பட பாடல்காட்சிகள்

ByA.Tamilselvan

Nov 18, 2022

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இந்தியன் 2 மற்றும் ராம்சரணின் RC-15 உள்ளிட்ட திரைப்படங்களை ஒரே நேரத்தில் இயக்கி வருகிறார்.
ஆர் ஆர் ஆர் படத்திற்கு பிறகு, ராம் சரண் நடிக்கவிருக்கும் பான் இந்திய படம் இதுதான். இப்படத்திற்கு பல எதிர்ப்பார்ப்புகள் உள்ள நிலையில், தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஜொலித்து கொண்டிருக்கும் டாப் நட்சத்திரங்களை வைத்து இப்படம் வெளிவர உள்ளது.தற்போது, இப்படத்தில் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகிவுள்ளது.எஸ் தமன் இப்படத்திற்காக இசையமைத்துள்ளார்.இதில் நடிகர் ராம் சரண், இரட்டை வேடத்தில் நடித்து கொண்டு இருக்கிறார் என்றும் போலீஸ் மற்றும் மாணவர் ரோலில் நடிக்கவுள்ளார் என்றும் பேசப்படுகிறது.கபிர் சிங் நாயகி கியாரா அத்வானி இப்படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.
இதனிடையே இந்தியன் 2 திரைப்படத்தின் ஷூட்டிங் தற்போது நடைபெற்று வரும் நிலையில் ஆர்சி-15 திரைப்படத்தின் ஷூட்டிங் நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது.
மேலும் தற்போது ஆர்சி -15 திரைப்படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படத்தின் அடுத்தகட்ட ஷூட்டிங் நியூசிலாந்தில் நடக்க இருப்பதாகவும், ரூ. 15 கோடி செலவில் பாடல் காட்சி ஒன்று பாடமாக்க பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.இதற்கு முன் வந்த ஷங்கர் படங்களை விட இப்படத்தின் பாடல் காட்சி மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.