• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

பிரபல தமிழ் நடிகைக்கு தமன்னாவுக்கு விரைவில் திருமணம்..!

ByA.Tamilselvan

Nov 17, 2022

பிரபல நடிகை தமன்னாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பது உறுதியாகி உள்ளது. தனது திருமணம் குறித்த அறிவிப்பை விரைவில் அவர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவர், தமிழில் வெளியான ‘கேடி’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது, தமிழ் மற்றும் தெலுங்கில் பட வாய்ப்புகள் போதுமான அளவு இல்லாததால், ஹிந்தியில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே, மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவரை தமன்னா திருமணம் செய்து கொள்ள இருப்பதாக இணையதளத்தில் தகவல்கள் வெளியானது. தனது வீட்டில் பார்க்கும் பையனைத் தான் திருமணம் செய்து கொள்வேன் என முன்பிருந்தே கூறிவரும் தமன்னா, இந்த தகவல்களுக்கு எந்த ஒரு மறுப்பும் தெரிவிக்கவில்லை. எனவே, தமன்னாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பது உறுதியாகி உள்ளது. தனது திருமணம் குறித்த அறிவிப்பை விரைவில் அவர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.