• Sun. Aug 2nd, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

ஜீன்ஸ் பேண்ட்டில் 93 கிராம் தங்கப் பேஸ்ட், ரூ.8.76 லட்சம் மதிப்பிலான மின்னணு சிகரெட் பறிமுதல்..,

BySeenu

Aug 2, 2026

கோவை சர்வதேச விமான நிலையத்தில் ஷார்ஜாவில் இருந்து வந்த ஆண் பயணியிடம் இருந்து ரூ.8.76 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டுச் சிகரெட்டுகள், மின்னணு சிகரெட்டுகள் மற்றும் ஜீன்ஸ் பேண்ட்டில் பதுக்கி எடுத்து வரப்பட்ட தங்கப் பேஸ்ட் ஆகியவற்றை மத்திய புலனாய்வுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாகக் கைப்பற்றினர்.

ஷார்ஜாவில் இருந்து கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த ஏர் அரேபியா விமானத்தில் வந்த பயணிகளைப் மத்திய புலனாய்வுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாகக் சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த பயணி ஒருவரை நிறுத்தி, அவரது சோதனையிடப்பட்ட போது லக்கேஜ் பைகளில் சட்ட விரோதமாகக் கடத்தி வரப்பட்ட 50,000 ‘எஸ்ஸி சேஞ்ச்’ (Esse Change) பிராண்ட் வெளிநாட்டுச் சிகரெட்டுகள் மற்றும் 80 ‘எல்ஃப்பார்’ (Elfbar) மின்னணு சிகரெட்டுகள் (Vapes) இருப்பது கண்டறியப்பட்டுப் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட் மதிப்பு ரூ.8.76 லட்சம் ஆகும்.

மேலும், அந்தப் பயணியை தீவிரமாகச் சோதனையிட்டதில், அவர் அணிந்து இருந்த ஜீன்ஸ் பேண்ட்டின் உட்பகுதியில் சாதுர்யமாகப் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 93 கிராம் எடை உள்ள தங்கப் பேஸ்ட்டையும் அதிகாரிகள் கண்டுபிடித்துப் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த சுங்கத்துறை அதிகாரிகள், கடத்தலில் ஈடுபட்ட அந்தப் பயணியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.