
குமாரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் ஆர்.பி.உதயகுமார் சிறப்புரை ஆற்றினார்.
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் மேற்கு தெற்கு ஒன்றிய கழகம் சார்பில் குமாரத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மதுரை மேற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சமயநல்லூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மலையாளம் வரவேற்புரை ஆற்றினார். இதில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவருமான ஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏக்கள் எம்.வி.கருப்பையா மாணிக்கம், மகேந்திரன், தமிழரசன் நிர்வாகிகள் திருப்பதி, வெற்றிவேல், சிவசக்தி புளியங்குளம் ராமகிருஷ்ணன், ராஜேஷ் கண்ணா மகளிர் அணி லட்சுமி பஞ்சவர்ணம் ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன், மு.காளிதாஸ், கொரியர் கணேசன், பேரூர் செயலாளர்கள் அழகுராஜா, குமார், அசோக், நிர்வாகிகள் விவசாய அணி வாவிடமருதூர் குமார், முடுவார்பட்டி ஜெயச்சந்திர மணியன், வாடிப்பட்டி மணிமாறன், தேனூர், பாஸ்கரன் குருவித்துறை காசிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பொதும்பு ராகுல் நன்றி கூறினார்.

