• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

ராஷ்மிகாவின் க்ரஷ்! யார் அந்த தமிழ் நடிகர்?

நடிகை ராஷ்மிகா மந்தனா மிகக் குறுகிய காலத்தில் தென்னிந்தியத் துறையில் மிக பிரபலமான நடிகையாக மாறியுள்ளார். கீதா கோவிந்தம், பீஷ்மா மற்றும் புஷ்பா: தி ரைஸ் போன்ற படங்களில் தனது நடிப்பால், ரசிகர்களின் இதயங்களை வென்றார். கடந்த ஆண்டு, கார்த்தி நடித்த சுல்தான் படத்தின் மூலம் கோலிவுட்டிலும் நுழைந்தார்.

ராஷ்மிகாவுக்கு ஒரு தமிழ் நடிகருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது மிகப்பெரிய கனவு. ஆம், பீஷ்மா படத்துக்கான ப்ரோமோஷன் ஒன்றின் போது, ​​ராஷ்மிகா வெட்கத்துடன் தமிழ் இளைய தளபதி விஜய் மீது தனக்கு க்ரஷ் இருப்பதை வெளிப்படுத்தினார். எப்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ராஷ்மிகா பல இளைஞர்களின் க்ரஷ் என்பதோடு, தேசிய அளவில் க்ரஷ் என்ற பெயரையும் பெற்றுள்ளார்! ராஷ்மிகாவின் ரசிகர்கள் தங்களை ரோஷியன்ஸ் என்று அன்புடன் அழைக்கின்றனர்.

புஷ்பா: தி ரைஸ் படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்கு பிறகு, ராஷ்மிகா இரண்டு பாலிவுட் படங்களில் நடிக்கிறார். சித்தார்த் மல்ஹோத்ராவுக்கு ஜோடியாக மிஷன் மஜ்னு மற்றும் அமிதாப் பச்சனுடன் குட்பை ஆகிய படங்களின் மூலம் ராஷ்மிகா, பாலிவுட்டிலும் அறிமுகமாகிறார்.