• Sat. May 9th, 2026
WhatsAppImage2026-05-08at053925
previous arrow
next arrow
Read Now

ரஞ்சிக்கோப்பை 2024 – ரசிகர்களுக்கு இலவச அனுமதி

Byவிஷா

Feb 8, 2024

ரஞ்சிக்கோப்பை 2024 கிரிக்கெட் போட்டியை ரசிகர்கள் இலவசமாகக் கண்டுகளிக்கலாம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
இந்திய அளவில் மாநிலங்களுக்கு இடையேயான கிரிக்கெட் வீரர்களை அடையாளம் காணும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டுக்கான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளன.
நாளை தமிழ்நாடு மற்றும் கர்நாடக அணிகள் மோதும் ரஞ்சிக்கோப்பை 2024 டெஸ்ட் போட்டியை ரசிகர்கள் இலவசமாக கண்டு களிக்கலாம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்த போட்டிகள் பிப்ரவரி 9ம் தேதி முதல் 12 ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது . இந்த போட்டியை ரசிகர்கள் ஊ,னு,நு ஸ்டாண்டுகளில் இருந்து இலவசமாக பார்த்து ரசிக்கலாம் எனவும், இலவசமாக பார்க்க விரும்புபவர்கள் 4 வது நுழைவாயில் வழியாக ரசிகர்கள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.