• Fri. Oct 16th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி இந்திய கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனி பெண்களுக்கு குடங்களில் தண்ணீர் பிடித்து கொடுத்து வாக்கு சேகரித்தார்.

இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியின் தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் களம் சூடு பிடித்து வரும் நிலையில் வேட்பாளர்கள் விதவிதமான செயல்களால் வாக்கு சேகரித்து வருகின்றனர். திமுக கூட்டணி ஆதரவுடன் ஏணி சின்னத்தில் போட்டியிடும் நவாஸ்கனி பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேந்தோணி பகுதியில் உள்ள பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அந்த பகுதியில் உள்ள பெண்களுக்கு குடிநீர் குழாயில் குடங்களில் தண்ணீர் பிடித்து கொடுத்து பெண்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இராமநாதபுரம் மாவட்ட திமுக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், மாவட்ட கலை இலக்கிய பிரிவு அமைப்பாளர் செந்தில் செல்வானந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.