• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

அயோத்தியில் ராம நவமி கொண்டாட்டம்

Byவிஷா

Apr 17, 2024

உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாலராமர் கோவிலில் முதல் ராம நவமி கொண்டாட்டம் கோலகலமாக நடைபெற்று வருகிறது.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தி நகரில் ராமர் கோவில் கட்டப்பட்ட பின் கொண்டாடப்படும் முதல் ராமநவமி விழா என்பதால், அயோத்தி நகரம் மீண்டும் விழாக்கோலம் பூண்டுள்ளது. ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு பீகாரைச் சேர்ந்த தேவராகன்ஸ் பாபா நிர்வாகம் சார்பில் அயோத்தி ராமர் கோவிலுக்கு 40,000 கிலோவுக்கு லட்டுகள் பிரசாதமாக அனுப்பி வைத்தது.
தற்போது ராம நவமியை முன்னிட்டு 1,11,111 லட்டுகள் பிரசாதமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நேரம் என்பதால் பக்தர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிறப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கோவில் மற்றும் மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.