• Wed. Mar 11th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

ரஜினியை சீண்டிய ராம்கோபால் வர்மா

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் ‘புஷ்பா’ படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப்படத்தில் ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடித்துள்ளனர். இந்நிலையில் இந்தப்படத்தின் டிரெய்லர் குறித்து பிரபல இயக்குனர் ராம் கோபால் பகிர்ந்துள்ள ட்வீட் தற்போது சர்ச்சைகளை கிளப்பியுள்ளது

ராஷ்மிகா மந்தனா முதல் முறையாக நடித்துள்ளார். இப்படம் முழுக்க முழுக்க செம்மரக்கடத்தல் மற்றும் அவர்களுடைய வாழ்க்கையை எடுத்துக் கூறும் வகையிலும் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராகவும், மரம் கடத்துபவராகவும் மிரட்டலான தோற்றத்தில் நடித்துள்ளார்.

மேலும் பிரபல மலையாள நடிகர் ஃபஹத் பாசில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்துள்ளார். ‘புஷ்பா’ படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, என மொத்தம் ஐந்து மொழிகளில் உருவாகி உள்ளது. அண்மையில் இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்தது. மேலும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இந்நிலையில் நேற்றைய தினம் வெளியாகியுள்ள இந்தப்படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த டிரைலர் குறித்து பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இது போன்று தத்ரூபமாக அச்சமின்றி நடிக்க அல்லு அர்ஜுன் என்ற ஒரே ஒரு சூப்பர் ஸ்டாரால் மட்டுமே முடியும் என பதிவிட்டுள்ளார்.

மேலும் பவன் கல்யான், மகேஷ் பாபு, சிரஞ்சீவி, ரஜினிகாந்த் ஆகியவர்களால் இதுபோன்றோ அல்லது இதற்கு மேலும் நடிப்பதற்கு தைரியம் இருக்கிறதா? என்றும் குறிப்பிட்டுள்ளார். சர்ச்சைகளுக்கு பெயர் போன ராம் கோபால வர்மாவின் இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஜினிகாந்த், மகேஷ் பாபு, பவன் கல்யாண் ரசிகர்கள் தற்போது ராம் கோபால் வர்மாவை விளாசி வருகின்றனர்.