மத்திய அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி வக்ஃப் திருத்த சட்டத்தை நிறைவேற்றியது. இந்த வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் இஸ்லாமிய அமைப்பினரும் பல்வேறு அரசியல் கட்சியின் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அனைத்து இஸ்லாமிய ஜமாஹத் கூட்டமைப்பு சார்பில் கண்டன பேரணி தற்போது நடைபெற்ற வருகிறது. மனிதநேய மக்கள் கட்சி,SDPI, திராவிட முன்னேற்றக் கழகம், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட ஏராளமான கட்சியினர் இந்த பேரணியில் பங்கேற்றுள்ளனர்.

இந்த பேரணியில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசுக்கு எதிரான கண்டனம் முழக்கங்களை எழுப்பியும் இந்திய தேசியக் கொடியினை கையில் ஏந்தியும் கண்டன பதாகைகளை கையில் ஏந்தியும் பல்லடம் நகராட்சியின் எல்லைப் பகுதியில் இருந்து NGR சாலை வரை பெண்கள் குழந்தைகள் ஆகியோர் ஊர்வலமாக வந்து கொண்டிருக்கின்றனர்.