


ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ராஜீவ்காந்தி கொலையாளிகள் விடுதலை செய்யப்பட்டதை ஒட்டி காங்கிரஸ் நிர்வாகிகள் கருப்பு சட்டை மற்றும் கருப்பு பட்டை அணிந்து மனக்குமுறலை வெளிப்படுத்தினர்.
ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் மாவட்ட தலைவர் டாக்டர் மக்கள் ஜி.ராஜன் தலைமையில் இன்று ஈரோடு கட்சி அலுவலகத்தின்
முன்பு மறைந்த பாரத பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை நீதிமன்றம் குற்றவாளிகள் என்று சொல்லி விடுதலை செய்ததை ஒட்டி தங்களது மனக்குமுறலை வெளிப்படுத்தும் விதமாக கருப்பு சட்டையும் கருப்பு பட்டையும் அணிந்து ராஜீவ் காந்தி அவர்களின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினர்.
மேலும் அவரோடு இறந்த 14 தியாகிகளுக்கும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம், மாவட்ட பொருளாளர் முத்துக்குமார் வட்டாரத் தலைவர்கள் சென்னிமலை சண்முகம், கொடுமுடி கிழக்கு கோபாலகிருஷ்ணன், கொடுமுடி மேற்கு டிஸ்கோ முருகேஷ், மொடக்குறிச்சி கிழக்கு கதிர்வேல், மொடக்குறிச்சி தெற்கு ஈஸ்வரமூர்த்தி, பெருந்துறை பேரூராட்சி கவுன்சிலர் பசிரியா பேகம், மாவட்ட பொதுச் செயலாளர் வாசுதேவன், தில்லை சிவக்குமார், பாலாஜி, இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் இலக்கியச் செல்வன், பேரூராட்சி தலைவர் விஜய் கிருஷ்ணா, இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் விஜய் வேம்பரசன் குமார் பிரபு முத்துப்பாண்டி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


