உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு மறைந்த முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் 81 வது பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
மறைந்த முன்னாள் பாரத பிரதமர் ராஜிவ் காந்தி- யின் 81 வது பிறந்த நாள் இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.,

இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் அதன் தமிழ் மாநில பொதுக்குழு உறுப்பினர் சரவணன் தலைமையிலான நிர்வாகிகள் மறைந்த முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு பொதுமக்களும், வாகன ஓட்டிகளுக்கும் இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.,
நூறு நாள் வேலைத்திட்டம் மற்றும் உசிலம்பட்டி தேவர் சிலையை திறந்து வைத்த பெருமைக்குரிய முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாள் அனுசரிப்பு நிகழ்ச்சியில் உசிலம்பட்டி நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.,








