சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த பட ஷூட்டிங்கில் நடித்து முடித்துவிட்டார். இறுதியாக டப்பிங் பணிகளையும் முடித்துவிட்டதாக செய்திகள் வெளியாகின. தற்போது ஓய்வில் இருக்கும் ரஜினிகாந்த் பேரன்கள் மற்றும் மகள்களுடன் ஓய்வு நேரத்தை செலவிட்டு வருகிறார்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் வாழும் கலை அமைப்பின் நிறுவனரும், ஆன்மிகவாதியுமான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை சந்தித்துள்ள போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மரியாதை நிமித்தமாக இருவரும் சந்தித்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது ரஜினியின் இரண்டு மகள்களான ஐஸ்வர்யா, செளந்தர்யா ஆகியோரும் உடன் இருந்தனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் லேட்டஸ்ட் புகைப்படத்தை ரசிகர்கள் சோசியல் மீடியாவில் அதிக அளவில் ஷேர் செய்து வருகின்றனர்.