• Wed. Mar 11th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை…

Byகாயத்ரி

May 12, 2022

அசானி தீவிர புயலாக காற்றழுத்த தாழ்வு மண்டலமாக விழுந்ததாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இருந்தாலும் தமிழகத்தில் திண்டுக்கல், மதுரை, விருதுநகர், குமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மூன்று நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.