• Tue. Dec 9th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

ராகுல் நடைபயணம் திடீர் மறிப்பு …ராகுல் கோபம் பரபரப்பு

ByA.Tamilselvan

Sep 8, 2022

இன்று 2ம்நாள் நடைபயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி பயணத்தில் திடீர்பரபரப்பு ஏற்பட்டது.
இந்திய ஒற்றைமை பயணத்தை நேற்று கன்னியாகுமரியில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி துவங்கியுள்ளார். இந்த நடை பயணத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்நிலையில் இன்று 2ம் நாள் பயணம் மேற்கொண்டுள்ள அவர் பயணத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இராண்டாம் நாளான இன்று நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட அரியலூர் கல்லூரி மாணவி அனிதாவின் குடும்பத்தினர் ராகுல்காந்தியை சந்தித்தனர். அப்போது திடீரென்று அனிதாவின் அண்ணனை பாதுகாவலர்கள் அகற்ற முயன்ற போது உடனே தடுத்து நிறுத்தி ஆவோசமாக பாதுகாவலரை ஓரமாக போகச்சொன்னார். இதனால் சற்று நேரம் அங்கு பரபரப்புஏற்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.