• Fri. Apr 26th, 2024

நீட் தேர்வில் அரியானாவை சேர்ந்த தனிஷ்கா முதலிடம்…

Byகாயத்ரி

Sep 8, 2022

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர்வதற்காக நீட் நுழைவு தேர்வு மத்திய அரசால் நடத்தப்பட்டு வருகிறது. 18 லட்சத்து 72 ஆயிரத்து 343 பேர் விண்ணப்பித்திருந்தனர். இருப்பினும் 17 லட்சத்தில் 78 ஆயிரத்து 725 பேர் தேர்வு எழுதினர். தமிழ் ஆங்கிலம் இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் தேர்வு எழுதிய நிலையில் தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் நீட் தேர்வை எதிர் கொண்டனர்.சிபிஎஸ்இ தேர்வு முடிவு தாமதமானதை ஒட்டி நீட் தேர்வு முடிவும் தாமதமானது. இதன் காரணமாக பொறியியல், மருத்துவ உயர் படிப்பு சேர்க்கை என்பது தள்ளிப்போனது. கடந்த மாதம் பொறியியல் கலந்தாய்வு நீட் தேர்வு முடிவினால் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. நீட் தேர்வு எழுதிய 17 லட்சத்து 64 ஆயிரம் பேரில், 9 லட்சத்தில் 93 ஆயிரத்து 69 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். நீட் தேர்வில் அரியானாவை சேர்ந்த தனிஷ்கா என்ற மாணவி 715 மதிப்பெண்கள் பெற்று இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். நீட் தேர்வில் உத்தரபிரதேசம் , மகாராஷ்டிரா மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை தமிழ்நாட்டில் இருந்து நீட் தேர்வு எழுதியவர்களில் 67,787 தேர்ச்சி பெற்றுள்ளனர் . திருதேவ் விநாயகா என்ற மாணவன் 705 மதிப்பெண்கள் பெற்று தமிழக அளவில் முதலிடமும் இந்திய அளவில் 30 வது இடத்தையும் பிடித்துள்ளார். அதேபோல் மாணவி ஹரிணி 702 மதிப்பெண்கள் பெற்று 43 ஆவது இடத்தை பிடித்துள்ளளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *