• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மாணவர்களின் கௌரவத்தை காப்பாற்றிய ராகுல்..,

ByS.Navinsanjai

May 8, 2025

தமிழகம் முழுவதும் இன்று 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் தமிழக அளவில் திருப்பூர் மாவட்டம் 97.53% தேர்ச்சி விகிதம் பெற்று மூன்றாம் இடம் பிடித்துள்ளது.

இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இயங்கி வரும் கண்ணம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற ராகுல் என்ற மாணவன் (arts and CA) வணிகவியல் பிரிவில் ஐந்து பாடங்களில் 100 மதிப்பெண்கள் பெற்று ஆங்கிலத்தில் 99 மதிப்பெண்கள் பெற்று மொத்தமாக 599 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதல் இடத்தை பெற்றுள்ளார்.

பல்லடம் அருகே புத்தரச்சல் பகுதியை சேர்ந்த சிதம்பரம் மற்றும் ராஜீ ஆகியோரின் மகன் ராகுல். மளிகை கடை வைத்திருக்கும் சிதம்பரத்தின் மகன் ராகுல் பல்லடத்தில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த நிலையில் இன்று வெளியான தேர்வு முடிவில் 599 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

ஐந்து பாடப்பிரிவுகளில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று, ஆங்கிலத்தில் 99 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். அவர் படித்த பள்ளியில் அவரது ஆசிரியர்கள், பள்ளி முதல்வர், சக மாணவர்கள், மற்றும் அவரது பெற்றோர்கள் ராகுலுக்கு வாழ்த்து தெரிவித்து இனிப்பு வழங்கினர். இதனையடுத்து பள்ளி நிர்வாகம் சார்பில் பள்ளி தாளாளர் அபர்ஜீத்தா ராகுலுக்கு சால்வை அணிவித்து பதங்கள் வழங்கி தங்கள் வாழ்த்தை தெரிவித்தனர். மேலும் Rahul saved the honor of the students..,