• Wed. Dec 11th, 2024

தமிழகம் வரும் ராகுல், பிரியங்கா காந்தி

இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த வார இறுதியில் சென்னை வரும் ராகுல் ஒரே நாளில் 3 இடங்களில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளாராம். ராகுல் வந்து சென்ற பின் பிரியங்கா மற்றும் கார்கே ஒருவர் பின் ஒருவராக வருவார்கள் என கூறப்படுகிறது.