• Thu. May 9th, 2024

பயோ இன்டஸ்ட்ரி கருத்தரங்கத்தின் துவக்க விழா நிகழ்ச்சி

BySeenu

Apr 27, 2024

குமரகுரு கல்லூரியில் உயிரித் தொழில்நுட்பத் துறை சார்பாக இரண்டு நாள் நடைபெறும் பயோ இன்டஸ்ட்ரி கருத்தரங்கத்தின் துவக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு துறை தலைவர்கள் பங்கேற்றனர்.

கோவை சரவணம்பட்டி பகுதியில் குமரகுரு கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் உள்ள உயிரித் தொழில்நுட்பத் துறை சார்பாக, இரண்டு நாட்கள் நடைபெறும் பயோ இன்டஸ்ட்ரி கருத்தரங்கத்தின் துவக்க விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் வளர்ந்து வருகின்ற போக்குகள், வாய்ப்புகள், சவால்கள் குறித்து மாணவர்கள், ஆசிரியர்கள், தொழில் வல்லுநர்கள் கலந்து கொண்டனர். உயிரி மருந்து மற்றும் உயிர் தகவலியல் துறையில் புதுமைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கேசிடி பயோ டெக்னாலஜி துறை தலைவர் டாக்டர் வினோகர் ஸ்டீபன் ராபில் வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக ஓவியா மெட்சேப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் விஜய் வெங்கட்ராமன் ஜனரதன், சக்தி சுகர்ஸ் நிறுவனத்தின் தரக்கட்டுப்பாட்டு மூத்த பொது மேலாளர் ஆஷிஷ் மாண்ட்லிக், குமரகுரு நிறுவனங்களின் வியூக திட்டமிடல் அலுவலர் டாக்டர் ரகுபதி, ஆகியோர் கலந்து கொண்டு இதுதுறை சார்ந்த பல்வேறு விளக்கங்களை மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர். மாணவர்கள் மத்தியில் டாக்டர் விஜய் வெங்கட்ராமன் கூறுகையில்..,
பயோ ஃபார்மாசூட்டிகல்ஸ், பயோ ஐடி, பயோ சேவைகள், மற்றும் விவசாய உயிரி தொழில்நுட்பம் ஆகியவைகளில் உள்ள பல்வேறு முன்னேற்றங்கள், மற்றும் கண்டுபிடிப்புகள் தொழில் துறைக்கு தேவையான முக்கிய பங்காக உள்ளது. அத்தகைய தேவைக்கு இன்றைய கல்வி முறை சிறந்த கருவியாக உள்ளது. கல்வியில் புதிய புதிய யுக்திகள் மாணவர்களிடம் இருந்து உருவாகின்றது இவ்வகையான உருவாக்கத்திற்க்கு இவ்வாறான கருத்தரங்கங்கள் முக்கிய காரணியாக செயல்படுகின்றது என்றார். தொழில் சார் சூழல்களில் தடைஇன்றி ஒருங்கிணைக்க தேவையான திறன்கள், மற்றும் நடத்தைகள் வேலை பயிற்சிக்கு தேவையான நேரத்தையும், வளங்களையும், புதிய புதிய கண்டுபிடிப்புகள் குறைக்கலாம் என்றும், கல்வித்துறை மற்றும் தொழில் கூட்டான்மை மூலம் ஒரு புதுமையான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க முடியும் என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *