• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

ரபேல் விவகாரம்…. விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மீண்டும் மறுப்பு!!!

ByA.Tamilselvan

Aug 29, 2022

ரபேல் விமான ஒப்பந்த முறைகேடு புகார் தொடர்பாக மீண்டும் விசாரிக்க கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
பிரான்ஸ் ஊடகத்தில் வந்த செய்திகளை தொடர்ந்து வக்கீல் சர்மா, ரபேல் ஒப்பந்தம் குறித்து மீண்டும் விசாரிக்க மனு தாக்கல் செய்தார். ரபேல் ஆர்டரை பெறுவதற்காக இடைத்தரகர் ஒருவருக்கு 1 மில்லியன் யூரோக்கள் வழங்கப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்திருப்பதாக பிரான்சில் தகவல் வெளியானது. இதன் அடிப்படையில், ரபேல் ஒப்பந்தத்தை மீண்டும் விசாரிக்க வேண்டும் எனவும், பிரான்ஸ் புலனாய்வாளர்களின் ஆவணங்களை வரவழைக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார். தலைமை நீதிபதி யு.யு.லலித், ரவீந்திர பட் ஆகியோர் தலைமையிலான பெஞ்ச் இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.