• Mon. Mar 27th, 2023

ஆண்டிபட்டி அரசு அருங்காட்சியகத்தில் நேதாஜி பயன்படுத்திய ரேடியோ .

ஆண்டிபட்டி பகுதியில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியகத்தில் இந்த மாத காட்சி பொருளாக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பயன்படுத்திய பில்கோ ரேடியோ வைக்கப்பட்டுள்ளதால் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கண்டு அறிந்து வருகின்றனர்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பகுதியில் அரசு அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் தேனி மாவட்டத்தின் வரலாற்று சிறப்புடைய பொருட்கள் மற்றும் பழங்கால பொருட்கள் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டு வருகிறது. இதனை பொதுமக்களும், மாணவர்களும் கண்டு, அறிந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த அருங்காட்சியகத்தில் மாதந்தோறும் ஓர் அரிய பொருளை காட்சிப்படுத்தி அதன் அருமை, பெருமைகளை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று நோக்கத்தில் மாதந்தோறும் ஓர் அரிய பொருளை காட்சிக்கு வைக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த 1950ம் ஆண்டு பிரபலமாக இருந்த 76 ஆண்டுகளுக்கு முந்தைய வானொலி பெட்டி அதாவது ( பில்கோ ரேடியோ) காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த வானொலி பெட்டியானது, இந்திய தேசிய படையை உருவாக்கிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 1945ம் ஆண்டு சிங்கபூர் அரண்மனையில் வசித்தபோது உபயோகப்படுத்தப்பட்டது. அவரது வெற்றிக்கான மந்திரம் ஜெய்ஹிந்த் என்பது இதில் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த வானொலி 19ம் நூற்றாண்டில் பிரபலமாக இருந்த பில்கோ நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. மேலும் நாட்டின் 75வது சுதந்திர தினத்தை நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடி வரும் இந்த நேரத்தில் விடுதலைக்கான ஒரு படையை நிறுவிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உபயோகப்படுத்திய வானொலி பெட்டியை காட்சி பொருளாக வைத்திருப்பது பெருமைக்குறியதாகும் என்று காப்பாட்சியர் கிருஷ்ணம்மாள் தெரிவித்தார். இந்த வானொலி பெட்டியை ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகளும் பொதுமக்களு கண்டு அறிந்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *