• Sun. Mar 16th, 2025

மஞ்சூர் பகுதிகளில் தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றி திரியும் தெரு நாய்களுக்கு தடுப்பூசிகள் மற்றும் கருத்தடை சிகிச்சை அளிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றி திரியும் தெரு நாய்களுக்கு வெறி நாய் கடிக்கான தடுப்பூசிகள் மற்றும் கருத்தடை செய்வதற்காக அருவங்காடு பகுதியில் செயல்பட்டு வரும் வேர்ல்ட் வாய்ஸ் வெட்னரி சர்வீஸ் குழுவினர்கள் மூலம் கால்நடை மருத்துவர் சுமன் ஆசித் நாகராஜ் முத்து குமார் ஆகியோர் மஞ்சூர் பகுதியில் சுற்றித்திரிந்த 25க்கும் மேற்பட்ட தெருநாய்களை பிடித்து வாகனங்கள் மூலம் அருவங்காடு காளிகா நகர் பகுதியில் செயல்பட்டு வரும் மருத்துவமனைக்கு எடுத்து சென்று வெறி நாய் கடிக்கான.

ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு அனைத்து நாய்களுக்கும் கருத்தடையும் செய்யப்பட்டு மூன்று முதல் ஐந்து நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து பிடித்து சென்ற இடத்தில் மீண்டும் தெருநாய்களை அதே இடத்தில் விட்டு செல்வார்கள் என மருத்துவர்கள் தெரிவித்தனர் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு கட்டாயம் வெறிநாய் கன தடுப்பூசி அருகே உள்ள கால்நடை மருத்துவமனைக்கு சென்று தடுப்பூசி போடப்பட வேண்டுமென தெரிவித்தனர்